மேக் அப் ரூமில் நடந்த 'பெட் ரூம்' சமாச்சாரம்...! 'Me too'- வில் சிக்கிய டைரக்டர்..! - Seithipunal
Seithipunal


நியூயார்க் (ராய்ட்டர்ஸ்) - ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்னும் பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் மீது பிரபலமான நடிகைகள் உட்பட மொத்தம் 80 க்கும் மேலான பெண்கள் மீ டூ வில் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்களா. இதை தொடர்ந்து, நடிகை அன்னபெல்லா சியோரா அவர் மீது, மேக் அப் ரூமில் தன் தலைக்கு பின்னால் கைகளை பிடித்து கட்டிவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை நீதிபதிகள் முன்பு  சாட்சியம் அளித்திருக்கிறார்.

அந்த வகையில், முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான வெய்ன்ஸ்டின் மீது  நடந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையின் பொது இதனை தெரிவித்தார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, என்னை மீறி அவர் என்னுடன் உடலுறவு கொண்டார். மேலும், எனது கைகள் கட்டிருப்பதால் என்னால் அவரிடம் சண்டையிட முடியவில்லை, என்று அவர் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களைக் கொண்ட நியூயார்க் நடுவர் மன்றத்திடம் தெரிவித்தார். 

கோர்ட் மேஜையில் உட்கார்ந்திருந்த வெய்ன்ஸ்டீன், விசாரணையின் போது குறிப்புகளை எடுத்தார். 67 வயதான வெய்ன்ஸ்டீன், மிமி ஹேலி மற்றும் ஜெசிகா மான் ஆகிய இரு பெண்களை பலாத்காரம் செய்த  குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்றும், நடிகைகளுடனான தனது பாலியல் உறவுகள் அனைத்தும் அவர்கள் சம்மதத்துடன்தான் நடந்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director abused more than 80 actress


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal