கம்போடியா : ஹோட்டல் சூதாட்ட விடுதியில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு - Seithipunal
Seithipunal


கம்போடியாவில் நட்சத்திர ஹோட்டல் சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய கம்போடியாவின் நகரமான பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டயமண்ட் சிட்டி ஹோட்டலுக்குள் உள்ள சூதாட்ட விடுதியில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 11:30 மணியளவில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து பலத்த காற்று காரணமாக தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து மளமளவென ஹோட்டல் முழுவதும் பரவ தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை முதற்கட்ட தகவல் தெரிவித்தது.

மேலும் தாய்லாந்து தரப்பில் இருந்து தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சக வட்டாரம் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் தாய்லாந்தின் சா கேயோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death toll rises to 26 in massive Cambodia hotel casino fire


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->