அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.! பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக மக்கள் தயாராகி வந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட தீவிர பனிப்புயலால் பல பகுதிகளில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதில் முக்கியமாக பஃபலோ, டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது.

இதனால் 4 முதல் 6 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. மேலும் பனிப்பொழிவால் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு இதுவரை 7 லட்சம் மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளனர். வாஷிங்டன் டி.சி.யில் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடுமையான பனி புயலால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. நேற்று முன்தினம் 2700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6400 விமானங்கள் கால தாமதத்துடன் புறப்பட்டு சென்றன. இந்நிலையில் சாலைகளில் பனி அடர்ந்து காணப்படுவதால் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடுமையான பனி சூறாவளி புயலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடுமையாக வாட்டி வந்த பனிப்புயல் படிப்படியாக குறையும் என்று அமெரிக்க வானொலி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll from severe snow storm in America rises to 39


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->