கொரோனா வைரஸ் இந்த வகை நாய்களிலிருந்து வந்ததா.? ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வருடங்களாக உலகையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தியது. இந்த வைரசானது வனவிலங்குகள் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

இத்தகைய நிலையில் அரிசொனா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பில் வுகான் நகரில் இருந்த வனவிலங்குகள் சந்தையில் இருக்கின்ற ரக்கூன் நாய்களிடம் இருந்து இவ்வகை வைரஸ் வெளிப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சர்வதேச விஞ்ஞானிகள் சேர்ந்து மேற்கொண்டனர்.

இதன் முடிவில் உகான் சந்தை பகுதியில் விலங்குகளில் எடுக்கப்பட்ட மாதிரி கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ரக்கூன் நாய்களின் மரபணு மாதிரிகள் மற்றும் மனிதர்களிடம் பரவிய கொரோனா வைரஸ் மரபணு மாதிரிகளுடன் ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona may come from raccoon dogs


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->