மத நிந்தனை குற்றச்சாட்டு: கிறிஸ்தவ வாலிபருக்கு மரண தண்டனை..! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் மத நிந்தனை  குற்றச்சாட்டிற்காக கிறிஸ்துவ வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் லாகூரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்லாமிய காலனி பஹவல்பூரில் வசிப்பவர் நௌமன் மசிஹ்(19). இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, செய்தியிடல் செயலியில் மத நிந்தனை தொடர்பாக அவதூறான விஷயங்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மத நிந்தனை குற்றத்திற்காக பாக்தாதுல் ஜதீத் காவல்துறையினரால் நௌமன் மசிஹ் கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மசிஹ்வின் செல்போனின் தடயவியல் பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் சில சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வாலிபருக்கு மரண தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து பஹவல்பூர் நகரின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் நிந்தனை என்பது பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Christian youth sentenced to death for sharing blasphemous in Pakistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->