இரசாயனம் நிறைந்த குடிநீர் விநியோகம்... சீனாவில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சீனாவில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பு இல்லாத முறையில் நச்சு கலந்துள்ள இரசாயன குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் சின்குவா பல்கலைக்கழக குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில், துணிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மனிதர்களால் உருவாக்கம் செய்யப்பட்ட பாலிபுளூரோஅல்கைல் (பி.எப்.ஏ.எஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த பாலிபுளூரோஅல்கைல் பாதுகாப்பு அளவை விட 20 விழுக்காடு அதிகளவு உள்ளதும், சீன நகரங்களில் அதிகளவு இரசாயன கலப்பு காணப்படும் உறுதியாகியுள்ளது. மேலும், சீனாவை பொறுத்த வரையில் தேசிய அளவிலான பாதுகாப்பு தர நிர்ணயங்கள் இல்லாத நிலையில், அமெரிக்காவின் ஒழுங்குமுறைகளை அளவுகோலாக எடுத்துக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவில் உள்ள வூக்சி, ஹெங்ஜாவ், சுஜாவ், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள போஸான் ஆகிய நகரிலும் இரசாயன கலப்புகள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் இரசாயன கலப்பு அதிகளவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரசாயன பொருட்கள் அனைத்தும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி வரும் இத்தகைய இரசாயனத்தால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China publish Toxic Water to drink Peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal