ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன, ரஷ்ய அதிபர்கள் அடுத்த வாரம் சந்திப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்க்கண்டில் வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதையடுத்து சீன அதிபர் ஷி ஜின்பிங்  மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் உச்சிமாநாட்டில் சந்திப்பார்கள் என்று பெய்ஜிங்கிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China and Russia president meet in Uzbekistan summit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->