வடகொரியா உளவு செயற்கைக்கோள் விவகாரம்: ஐ.நா கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா மோதல்..! - Seithipunal
Seithipunal


கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாகவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வதை எதிர்த்து வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. மேலும் கொரிய எல்லை பகுதியில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கண்காணிப்பதற்கு வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வடகொரியாவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா பாதுகாப்பு விதிகளை வடகொரியா மீறி உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருவதாக வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்தது.

இதைத்தொடர்ந்து வடகொரியாவிற்கு கண்டனம் தெரிவிக்க ரஷ்யா மற்றும் சீனா மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும் கொரிய தீபகற்பத்தில் நிகழும் போர் சூழலுக்கு அமெரிக்காவே முக்கிய காரணம். கொரிய பிரிவினை போருக்கு பின் அமெரிக்கா, தென்கொரியாவுடன் சேர்ந்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருவது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தூண்டியதாக ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் ஐ.நா உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கூட்டத்தில் ஐ.நா, சர்வதேச பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China and Russia clash with america over north Korea satellite issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->