ஒரு அங்குலம் கூட தர முடியாது.. டிரம்புக்கு தாலிபான்கள் மிரட்டல்!
Can't give even an inch The Taliban threatening Trump
எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது." என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ர தெரிவித்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.
இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், "பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ரத், இத்தொடர்பாக பேசிய அவர் "சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர்.ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது." என்று தெரிவித்தார்.
English Summary
Can't give even an inch The Taliban threatening Trump