கனடாவில் சொத்து வாங்க வெளிநாட்டினருக்குத் தடை.! - Seithipunal
Seithipunal


கனடாவில் அந்நிய நாட்டின் முதலீட்டாளர்கள் அரசியல் வாதிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தனர். 

இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் வீட்டின் விலைகள் இருபது சதவீதம் உயர்ந்ததுடன் வீட்டின் வாடகையும் அதிகரித்தது. இதனால் கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டில் சொத்துக்கள் வாங்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். 

இந்நிலையில், கனடா அரசு சொத்துக்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைக்கும் வகையிலும் சொந்த நாட்டினருக்கு உதவும் நோக்கத்திலும் வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்குவதற்கு  தடை விதிக்க முடிவு செய்து, அதற்கான சட்டமும் இயற்றப்பட்டு அமலுக்கும் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

அதன் படி, கனடாவில் இனி வெளிநாட்டினர் யாரும் சொத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடை கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டினருக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada govt ban to foreigners buying property


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->