மீண்டும் புயலினால் வெள்ளத்தில் மூழ்கிய கலிபோர்னியா.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பனி, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொடர் புயலால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் நிலங்கள் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் வீசிய புயலால் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மின்சார கட்டமைப்பு முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் 1,60,000 பேர் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து புயல் மேலும் தெற்கு நகரங்களை தாக்க வாய்ப்புள்ளதால் அல்பாக், அலன்ஸ்வொர்த் மற்றும் துலாரே கவுண்டியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தெற்கு கலிபோர்னியாவில் கடலோர மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் 7 செமீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், 35 மில்லியன் மக்கள் புயல் எச்சரிக்கையின் கீழ் இருப்பதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

California flooded by another storm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->