ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறக்கம் பிரிட்டனின் எப் 35பி போர் விமானம்: காரணம் என்ன..?
British F 35B fighter jet makes emergency landing in Japan
பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி போர் விமானம், உலகின் மிக விலை உயர்ந்த போர் விமானங்களில் ஒன்றாகும். குறித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்த மாதம் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர், 25 பிரிட்டன் பொறியாளர் குழுவினர், இந்தியாவைன் கேரளா திருவனந்தபுரத்திற்கு வந்து, விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். இறுதியில் 37 நாட்களுக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் பிரிட்டன் திரும்பியது.
இந்நிலையில், ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில், பிரிட்டனின் எப் 35பி போர் விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பிரிட்டனின் ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வந்தததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

குறித்த பிரிட்டனின் எப் 35பி போர் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ககோஷிமா விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 20 நிமிடங்கள் மூடப்பட்டது. இதனால், புறப்பட தயாராக இருந்த 06 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இந்த ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள், ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது, ஆப்பரேஷன் ஹைமாஸ்ட் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகள் ஆகஸ்ட் 12 வரை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
British F 35B fighter jet makes emergency landing in Japan