குண்டு வீசி தாக்குதல்.. 40 பேர் பலி..மத வழிபாட்டு தலத்தில் சோகம்! - Seithipunal
Seithipunal


மியான்மரில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்  40 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.அதனை தொடர்ந்து  நாட்டின் அதிபராக இருந்த ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து , ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சிக்குழுக்கள் போராடி வருகின்றன. இந்த போராட்டத்தால் அங்கு தினம் தினம் நிலைமை மோசமானது.மேலும் அந்த கிளர்ச்சிக்குழுக்கள்  நகரின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இந்நிலையில், அந்நாட்டின் சஹாயிங் மாகாணம் மவ்யா மாவட்டம் சாங்-யூ நகரம் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு பவுர்ணமியையொட்டி புத்தமத முக்கிய பண்டிகையான தடிங்யட் முழு நிலவு விழா கொண்டாடப்பட்டது.அப்போது  இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மத வழிபாடு செய்தனர்.

அப்போது, மத நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாரகிளைடர், பாரசூட்டில் வந்த ராணுவத்தினர் கூடியிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb attack 40 people killed Mourning at the religious worship place


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->