சீனாவின் பேச்சை தட்டி கழித்த ஆஸ்திரேலிய எம்.பி.க்கள்! ஆத்திரத்தில் சீனா எடுத்த முடிவு?
Australian MPs visit Taiwan
கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும் சீனா சமீப காலமாக தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்து வருகிறது.
மேலும் மற்ற நாடுகள் தைவான் உடன் தூதராக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பிகள் கொண்ட குழுவினர் சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் செமி கண்டக்டர் துறை போன்றவற்றை குறித்து விவாதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பார்லி போன்ற பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனா-ஆஸ்திரேலியா இடையில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. அதனை சீரமைக்க ஆஸ்திரேலியா செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி களின் பயணத்தால் மேலும் சிக்கலாக கருதப்பட்டுள்ளது.
English Summary
Australian MPs visit Taiwan