கியூபாவை குறிவைக்கும் அமெரிக்கா...ஈரானுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை...! - அமெரிக்காவின் அடுத்த மூவ் இதோ...!
America targets Cuba public warning Iran Here America next move
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இரவு விருந்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் போருக்கு பின்னர் நிகழக்கூடிய சூழ்நிலையை சிரிப்பூட்டும் விதமாக விவரித்தார்.

அவர் தெரிவித்ததாவது," ஈரானில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் வலிமையான போர்க்கப்பல்களில் ஒன்றான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ நாடு திரும்பும் வழியில் கியூபா கடற்கரைக்கு அருகில் வந்து நின்றாலே போதும்.
அந்த பிரமாண்டமான கப்பலைக் கண்டவுடன், கியூபா அரசு “நன்றி, நாங்கள் சரணடைகிறோம்” என்று சொல்லிவிடும் என நகைச்சுவை கலந்த கிண்டலுடன் குறிப்பிட்டார்.
மேலும், “ஒரு பணியை தொடங்கினால் அதை முழுமையாக நிறைவு செய்வதே எனக்கு பிடிக்கும். முதலில் ஈரான் தொடர்பான பணியை முடிப்போம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநாளில், கியூபாவுக்கு எதிராக எரிசக்தி மற்றும் ராணுவ துறைகளை குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
America targets Cuba public warning Iran Here America next move