சாத்தானை வழிபாடும் மக்களுக்கு எதிராக இரகசிய யுத்தம்?.. சர்ச்சையை கிளப்பும் அமெரிக்காவின் Q-Anan கோட்பாடு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இலுமினாட்டிகள் கட்டுப்பாடு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இது பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற தாக்குதல் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான சர்ச்சையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிக்கியுள்ள தருணத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியதில் பெரும்பாலானோர் கோட்பாட்டை கியூ அனான் (Q Anon) என்ற கோட்பாட்டை நம்பும் நபர்கள் என்பதும் தெரியவருகிறது. 

கடந்த 2014 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் இணையத்தில் இது தொடர்பாக பதிவு செய்து இருந்தார். பல நாடுகளின் அரசுகள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் சாத்தானை வழிபடும் மேல்குடி மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு ரகசிய யுத்தத்தை நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது. 

இதனையடுத்து, இலுமினாட்டிகள் போலவே கியூ அனான் கோட்பாடும் தலைதூக்க தொடங்கிய நிலையில், அதற்காக பல கட்டுக்கதைகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலரையும் இது கட்டுப்படுத்துகிறது என்ற மாயையும் உருவாகியது.

இந்த கியூ அனான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்களை அமெரிக்க அதிபர் தெரிந்தோ தெரியாமலோ லைக் செய்திருந்த நிலையில், கியூ அனான் தொடர்பான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America Q Anan issue


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->