அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவர்! பின்னணியில் அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க உடற்பயிற்சி நிலையத்தில் இந்திய மாணவர் வருண் ராஜ் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை படித்து வந்தவர் வருண் ராஜ் (வயது 24). இவரை தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பொது உடற்பயிற்சி நிலையத்தில் கத்தியால் குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த வருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக லூதரன்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் மாணவர் வருண் ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக வால்பாரைசோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மாணவர் வருண்ராஜின் மறைவை மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்கள் பல்கலைக்கழகம் அதன் சொந்தம் ஒன்றை இழந்துள்ளது. வருணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

வருணின் குடும்பத்தினரின் கடினமான நேரங்களில் எங்களால் முடிந்த உதவி மற்றும் ஆதரவை அவர்களுக்கு வழங்குவோம். வருகின்ற 16ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் வருண்ராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America Indian student killed in knife attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->