குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசி தயாரிக்க 11 மில்லியன் டாலர் நிதி.! அமெரிக்கா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் 98 நாடுகளில் கிட்டத்தட்ட 47,600 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுதல் மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 17000-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

மேலும் டென்மார்க்கை சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தினுடைய ஜென்னியோஸ் தடுப்பூசி தயாரிக்க அந்நிறுவனத்திடம் இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா இந்த நிறுவனத்திடம் 30 லட்சம் டோஸ்கள் ஆர்டர் செய்துள்ள நிலையில், கூடுதலாக ஜூலையில் 25 லட்சம் டோஸ்கள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America allocates 11 million to manufacture monkey pox vaccine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->