நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அதிரடி முடிவு!
amazon cuts hundreds jobs Alexa division
அமேசான் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிறகு பிரபல நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டது. அது போல் பிரபலம் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது அலெக்ஸா பிரிவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.

இதில் அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களும் உள்ளனர். இந்த நடவடிக்கை செயற்கை முன்னறிவிப்பு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் வகையில் மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அமேசான் 50 கோடிக்கும் மேல் அலெக்ஸா கருவிகளை விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்கள், ஆட்கள் குறைப்பு நடவடிக்கையின் காரணமாக வேலை இழக்கின்றனர்.
கடந்த வாரம் அமேசான் தனது இசை மற்றும் கேமிங் பிரிவுகளிலும் சில மனித பணிகளிலும் இருந்த வேலைகளை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
amazon cuts hundreds jobs Alexa division