ஆப்கானிஸ்தான் || 27 பேரை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற தலீபான்கள்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!    - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அன்று முதல் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகே அமைந்து இருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து, தலீபான்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 27 பேரை கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சம்பவம் கடந்த மாத இறுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற விசாரணை அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்ப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலீபான் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எனயதுல்லா கவாரஸ்மி தெரிவித்ததாவது,

"சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் இதுபற்றிய கூடுதல் விவரங்களை வழங்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

afganistan thalepangal kill 27 peoples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->