பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்.!  - Seithipunal
Seithipunal


பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்.! 

சமீபத்தில் இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது. 

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெறுகிறது. இந்த விண்கலத்தில், பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் சார்பில் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த விண்கலம் பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆய்வுசெய்ய உள்ளது. 

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு ஆரம்பமானது. 

அதன் படி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aditya l-1 spaceship take off today from sriharikotta


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->