இஸ்ரேலுக்கும் யூத பாரம்பரியத்திற்கும் ஆதரவு கருத்து தெரிவித்த நடிகைக்கு மண்டை ஓடு 'பார்சல்' அனுப்பி மிரட்டல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் பிரபல யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியான 'எச்3'யின் இணைத் தொகுப்பாளரான நடிகை ஹிலா க்ளெய்ன் உள்ளார். இவர் தனது யூதப் பாரம்பரியம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதனால், இவருக்கு கடந்த சில மாதங்களாக இணையத்தில் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்துள்ளன. அத்துடன், சமீபத்தில் இவரது குழந்தைகள் முறையாகக் கவனிக்கப்படவில்லை என குழந்தைகள் மற்றும் குடும்ப நல சேவைத் துறைக்கு மர்ம நபர்கள் புகாரை அளித்தனர்.

இந்தத் தவறான புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அதே நாளில், இவர்களது அலுவலகத்திற்கு வந்த ஒரு தபாலில் இரண்டு உண்மையான மனித மண்டை ஓடுகள் பார்சலாக வந்துள்ளது. இதைக்கண்டு ஹிலா மற்றும் அவரது கணவர் ஈதன் க்ளெய்ன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவர்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் ஹிலா தெரிவித்துள்ளார். தொடர் மிரட்டல்களால் தனது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் ஹிலா கூறியுள்ளார்.

அத்துடன்,  'என் யூதப் பாரம்பரியத்திற்காகப் பேசுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்' என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளதுடன், அதனை மறைத்து எடுத்துச் செல்வதற்கான உரிமத்திற்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress threatened with skull parcel after expressing support for Israel and Jewish heritage


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->