பாங்காக்கிலிருந்து மாஸ்கோ சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து; டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்..!
A sudden fire broke out on a flight from Bangkok to Moscow Emergency landing at Delhi airport
தாய்லாந்து பாங்காக்கிலிருந்து மாஸ்கோவிற்குப் பயணித்த ஏரோ ப்ளோட் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், குறித்த விமானம் டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு பாங்காக் விமான நிலையத்திலிருந்து இன்று 425 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டு சென்ற விமானம் இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் அந்த விமானத்தின் உள்ளே திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனை உடனடியாக அறிந்த விமானி உடனடியாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, டில்லி விமான நிலையத்தில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானியின் துரித நடவடிக்கை காரணமாக அந்த விமானத்தில் இருந்த 425 பயணிகளும், விமான பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் விமானத்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
English Summary
A sudden fire broke out on a flight from Bangkok to Moscow Emergency landing at Delhi airport