விராட் கோலி பேனர் முன்பு ஆட்டை பலியிட்டு ரத்தத்தால் அபிஷேகம்; 03 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு மாறும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டி, கடந்த 03-ந்தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி திரில்வெ வெற்றிப்பெற்றது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள்  கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தாலுகா மரியம்மனஹள்ளி கிராமத்தில் பெங்களூரு அணி ரசிகர்கள், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேனரை வைத்துள்ளனர். 

அத்துடன், அந்த பேனர் முன்பு 03 வாலிபர்கள் ஆடு ஒன்றை அரிவாளால் வெட்டி பலி கொடுத்து, அந்த ஆட்டின் ரத்தத்தை விராட் கோலியின் பேனர் மீது தெளித்து அபிஷேகம் செய்துள்ளனர்.

மேலும் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து முலகால்மூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, மரியம்மனஹள்ளியை சேர்ந்த பாலய்யா, ஜெயண்ணா, திப்பேசாமிஆகிய 03 பேர் ஆட்டை பலியிட்டது தெரியவந்த நிலையில், பொலிஸார் அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

03 people arrested for sacrificing a goat in front of Virat Kohli banner and anointing it with blood


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->