பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் 07 பாதுகாப்பு படைவீரர்கள் பலி: 05 வீரர்கள் காயம்..!
7 security forces killed in a landmine attack in Pakistan
பாகிஸ்தானின் கண்ணிவெடி தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் 07 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
குறித்த அமைப்பு பாகிஸ்தான் போலீசார் மற்றும் ராணுவம் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேவேளை, இந்த கிளர்ச்சி அமைப்பை குறிவைத்து பாதுகாப்புப்படையினரும் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பலூசிஸ்தான் மாகாணம் குச்சி மாவட்டம் மச் பகுதியில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது, இந்த வானத்தை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பு கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது. குறித்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 07 பேர் உயிரிழந்ததோடு, 05 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
7 security forces killed in a landmine attack in Pakistan