கார் விபத்து தொடர்பில், மத கலவரத்தை தூண்டும் வகையில் பொய் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை கைது செய்யவேண்டும் என புகார்..!
Complaint that Madurai Atheenam should be arrested for spreading false information to incite religious riots in connection with the car accident
மதுரை ஆதினம் உளுந்தூர்பேட்டை அருகே தான் சென்ற கார் மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியதாகவும், தன்னை கொல்ல முயற்சி நடந்ததாகவும் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். ஆனால், அவரது கார்தான் மற்றொரு கார் மீது மோதியது என சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.
இந்நிலையில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பொய் தகவலை தெரிவித்ததாக, மதுரை ஆதீனத்தை கைது செய்ய வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக 10-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, கு.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அமைதியான தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் திட்டமிட்டு செயல்படுகிறார் என்றும், எனவே அவர் மீது மதக்கலவரத்தை தூண்டுதல், ஒற்றுமையை சீர்குலைத்தல், தமிழ்நாடு அரசுக்கு தவறான தகவலை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், மனிதநேய ஜனநாயக கட்சியின் சமூக நீதி பாசறை மாநில செயலாளர் ரமேஷ் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனுவில் மதுரை ஆதீனம் மற்றும் அவரது ஓட்டுநர் மீது கலவரத்தை தூண்டும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Complaint that Madurai Atheenam should be arrested for spreading false information to incite religious riots in connection with the car accident