இன்னும் 03 ஆண்டுகளில் தேடுதல்கள் 40% குறைந்து விடும்; ஆபத்தை நோக்கி செல்லும் கூகுள்..!
A study suggests that Google searches will decrease in the next 03 years
இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகப் பார்க்கப்படுகிறது. இணையதள பாவானையாளர்கள் கூகுளின் வருகைக்குப் பிறகு ஒட்டுமொத்த விஷயங்களையும் ஒரே இடத்தில் இருந்து அனைத்தையும் தேடிப் பெற்று வருகின்றனர். கூகுள் ஒட்டு மொத்த தகவல்களையும் தருவதால், கூகுள் உலகத்தின் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற இணையதளமாக உள்ளது.
இந்நிலையில், கூகுள் மூலம் இணையதளங்களில் தகவல்களைத் தேடுவது தற்போது குறைந்து வருவதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, உலகளவில் 33% க்கும் மேற்பட்ட புதிய வலைத்தளங்கள் கூகுள் தேடல் பாதையை இழந்துள்ளன என்றும், அமெரிக்காவில் இந்தச் சரிவு இன்னும் அதிகமாக உள்ளதாகவும், அங்கு இதன் பாதை 38% குறைந்துள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் 03 ஆண்டுகளில் கூகுள் தேடுதல்கள் 40% குறைந்து விடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏஐ வசதி வந்துவிட்டதால் பல்வேறு தளங்களில் உள்ள தகவல்களை ஒரே நேரத்தில் திரட்டி தருகின்றது. இதன் காரணமாக, கூகுள் சர்ச் தேவை தற்போது குறையக் காரணம் என குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வானிலை, தொலைக்காட்சி வழிகாட்டிகள் அல்லது ஜாதகங்கள் போன்ற வாழ்க்கை முறை அல்லது பயன்பாட்டு உள்ளடக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற பதிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் இணையதள நிறுவனங்களின் விளம்பர வருவாய் கடுமையாகக் குறையும் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இணையதள நிறுவனங்கள் யூ ட்யூப் போன்ற தளங்களுக்கு மாறுவது போன்ற யுக்திகளை பின்பற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
English Summary
A study suggests that Google searches will decrease in the next 03 years