தன் இஷ்டத்துக்கு வரிவிதித்த விவகாரம்; அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வரவிருக்கும் புதிய நெருக்கடி..!
A new crisis looms for US President Trump over his arbitrary tax policy
இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டியும், ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 வீதத்திற்கும் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.
இந்த வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது' என, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குறித்த தீர்ப்பினை எதிர்த்து அதிபர் டிரம்ப் தரப்பில் அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகம் அவசர அவசரமாக மாற்று வழிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் வரிவிதிப்பை உச்ச நீதிமன்ற ரத்து செய்து விட்டால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி அதிபர் டிரம்புக்கு ஏற்படும். ஆகவே, முன்கூட்டியே, புதிய வரிகளை வகுக்கும் பணிகளில் அமெரிக்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
English Summary
A new crisis looms for US President Trump over his arbitrary tax policy