'விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏதாவது மானியம் கொடுத்தீர்களா..? எதுவும் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது'. நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு..!
Nayinar Nagendran accuses Tamil Nadu government of cheating farmers by not providing them any subsidy
நான்கு வருஷத்தில் மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதில் தமிழக அரசு வீணடித்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு மானியம் என்று எதுவுமே கொடுக்காமல் தமிழக அரசு வஞ்சிக்கிறதாகவும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
நான்கு வருஷத்தில் மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதில் தமிழக அரசு வீணடித்துள்ளது. கஞ்சா, போதைபொருள், சொத்துவரி உயர்வு, மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு என்று எதுவுமே செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உதயநிதியை முதல்வராக்க கூட்டணி என்ற பலத்தில் எல்லா ஏற்பாடுகளையும் திமுக அரசு செய்து கொண்டு இருக்கின்றதாகவும், எஸ்ஐஆர் என்ன என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், 18 வயது அடைந்தவர்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். இதில் என்ன வருத்தம் இருக்கிறது என்பது தான் எங்களுக்கு தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், குறுவை நெல் சாகுபடிக்கு 120 நாள். இந்த நாள் முடிந்தவுடன் கொள்முதல் பண்ணவேண்டியது யார் பொறுப்பு எனவும், இது தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல் கொள்முதலுக்கு தமிழக அரசு எங்கேனும் சேமிப்பு கிடங்குகள் வைத்துள்ளதா..? ஆனால் 06 இடங்களில் மத்திய அரசு அதற்கான கிடங்குகளை வைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அறுவடை முடிந்தவுடன் ஏன் கொள்முதல் செய்யவில்லை என்பது எங்களின் கேள்வி எனவும், மழையில் பயிர்களை நனையவிட்டு, அதை முளைக்கவிட்டு, ஈரப்பதம் ஆகவிட்டது, அதற்கு ரூபாய் தாருங்கள் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வந்த போது, 18000 கோடி ரூபாய் கொடுத்தார். வருஷத்துக்கு ரூ.6000 கோடி. உண்மையில் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது யார்..? மத்திய அரசு தான் என்று கூறியுள்ளதோடு, தமிழக அரசு ஏதாவது மானியம் கொடுக்கிறீர்களா? எதுவும் கொடுப்பதில்லை, விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கிறதாக நயினார் நாகேந்திரன் பேட்டியில் கூறியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran accuses Tamil Nadu government of cheating farmers by not providing them any subsidy