மெக்சிகோ: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் எகாடெபெக் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலிமர் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து தொழிற்சாலை முழுவதும் பரவத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியதால் தொழிற்சாலைகளில் இருந்த டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருள்கள் கருகி சேதமடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்புகைகள் சூழ்ந்து காட்சியளித்தது.

இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A massive fire at a plastics factory in mexico


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->