பள்ளிகளில் விஷம் வைத்து 80 மாணவிகளை தாக்கிய கொடூர சம்பவத்தால் பரபரப்பு.!
90 school students poison attack in Afghanistan
பள்ளிகளில் வைக்கப்பட்ட விஷத்தால் என்பது சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ஆப்கானிஸ்தானில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் சாங்சரக் மாவட்டத்தில் அமைந்துள்ள 2 பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கின்ற சிறுமிகள் தான் இந்த விஷ தாக்குதலில் பலிகடா ஆகியுள்ளனர். இதுவரை இந்த விஷயத்தை தாக்குதலுக்கு 80 மாணவிகள் ஆளாகியுள்ளனர்.

இது போன்ற விஷ தாக்குதலில் ஈடுபட 3 பேருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே இது போல ஈரானில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட நிலையில் அதுபோல ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
English Summary
90 school students poison attack in Afghanistan