சீனாவில் பெரும் சோகம்; நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து; 90 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
90 Dead in Massive Coal Mine Explosion in China
சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தில், கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 90 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமையன்று) திடீரென பயங்கர ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், சுரங்கம் சரிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
இந்த பயங்கர சம்பவத்தையடுத்து, உடனடியாக மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் 90 பேர் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ள நிலையில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சீனா அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் கடந்த 25 ஆண்டுகளாக, கடுமையான விதிமுறைகள் காரணமாக, நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், லியுஷென்யு நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து சம்பவம், கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பதிவான மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்றாகப் கருதப்படுகிறது.
English Summary
90 Dead in Massive Coal Mine Explosion in China