மத்திய அரசு வேலைக்கு 12,256 காலிப் பணியிடங்கள்: SSC CGL 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி..? - Seithipunal
Seithipunal


பணியாளர் தேர்வாணையம், ''ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, 2026''-க்கான அறிவிப்பை 21.05.2026 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களை நிரப்ப, திறந்தநிலை போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது.

அதன்படி, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் சுமார் 12,256 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

ஆணையத்தின் இணையதளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் உள்ள ‘mySSC’ செயலி மூலம் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடைசித் தேதி 22.06.2026 (இரவு 11:00 மணி) இணையவழிக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி 23.06.2026 (இரவு 11:00 மணி).

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், 1800 309 3063 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தென் மண்டலத்தில், கணினி வழித் தேர்வு தோராயமாக ஆகஸ்ட்-செப்டம்பர் 2026 அன்று,ஆந்திரப் பிரதேசத்தில் 13, புதுச்சேரியில் 01, தமிழ்நாட்டில் 09, தெலங்கானாவில் 04 என மொத்தம் 27 மையங்கள்/நகரங்களில் போட்டித் தேர்வு நடைபெறவுள்ளன.

பதவி விவரங்கள், வயது வரம்புகள், அத்தியாவசிய கல்வித் தகுதிகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், தேர்வுத் திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாகத் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to apply for the SSC CGL 2026 exam for 12256 vacancies in Central Government jobs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->