'கூடவே இருந்து அவனும் தேடினானே.. அடிச்சி கொன்னுருக்காங்களே, என் புள்ள வலியே தாங்காதே சார்'; கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் கதறல்..!
The Wailing of the Mother of the 10 Year Old Girl Murdered in Coimbatore
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போன நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அத்துடன், சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணை நடத்தியதில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 02 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரிடமும் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் குறித்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இந்த நிலையில், குற்றச்சம்பவம் எப்படி நடந்தது என்று பேசிய சிறுமியின் தாய் உருக்கமாக பேசியுள்ளதாவது;
''பாப்பா கடைக்கு போயிட்டு வரன்னு போனா, மிட்டாய் எதோ வாங்கி கொடுத்துட்டு வண்டில ஏறுன்னு சொன்னதும் ஏறி போய்ட்டா போல, பக்கத்துல குடியிருந்து காலி பண்ணவன் தான். அதனால தெரிஞ்சவன் தான்னு ஏறி போயிருக்கா, கொண்டுபோய்ட்டு இப்படிலாம் பண்ணிட்டான். மறுநாள் எங்க கூட சேர்ந்து அவனுமே பாப்பாவ தேடிட்டு இருந்தான், அவன் மேல எங்களுக்கு சந்தேகம் இருந்தது.

பக்கத்துல தான போனா சீக்கிரம் வந்துடுவான்னு பார்த்தோம், ஆனா வரல.. அரைமணி நேரம் தேடுனதுக்கு பிறகு போலீஸ்க்கு சொல்லிட்டோம். அவங்களும் தேடுனாங்க, அப்பவும் கூட சுத்திட்டே அந்த வண்டில போனா பாப்பா, இந்த வண்டில போனானு சொல்லிகிட்டு இருந்தான். அவன் மட்டுமில்லாம அவனோட பொண்டாட்டி, அந்த பொம்பளையோட தம்பி 3 பேருமே சேர்ந்துதான் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்ல, நாங்க அங்க குடிபோன 10 நாள்ல அவங்க காலி பண்ணிட்டு போயிட்டாங்க.
என்ன பண்ணாங்கனு தெரியலே சார், அடிச்சி கொன்னுருக்காங்களே, என் புள்ள வலியே தாங்காதே சார்'' என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். பெற்ற பிள்ளையை இழந்த தாயின் இந்த அழுகை பார்ப்போரின் நெஞ்சை கனமாக்கியுள்ளது.
English Summary
The Wailing of the Mother of the 10 Year Old Girl Murdered in Coimbatore