மத்திய ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


மத்திய ஜப்பானில் இன்று (வெள்ளிக்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது மத்திய இஷிகாவா பகுதியில் மதியம் 2:42 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஜப்பானிய ஷிண்டோ அளவுகோலில் அதிகபட்சமாக ஆறாக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தால் பிரபலமான சுற்றுலாத் தலமான நாகானோ மற்றும் கனாசாவா இடையே ஷிங்கன்சென் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 point 3 Magnitude Earthquake Hits Central Japan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->