6 மாத குழந்தை உடலில் 50 இடங்களில் இருந்த இரத்த காயங்கள்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
6 month baby body 50 places blood wounds
அமெரிக்கா, எவான்ஸ்வில் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஷோனபாம். இவரது மனைவி ஏஞ்சல் ஷோனபாம். இவர்களுக்கு 2 குழந்தை, 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களுடன் உறவுக்கார பெண்ணான டெலானியா துர்மன் என்பவரும் வேறொரு குடும்பத்தினரும் குழந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டேவிட் தனது 6 மாத ஆண் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசர சேவைக்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் டேவிட் வீட்டிற்கு சென்று குழந்தையை பார்த்தபோது தலை மற்றும் முகம் என 50 இடங்களில் ரத்த காயங்கள் காணப்பட்டது.

கைவிரல் பகுதிகளில் சதை முழுவதும் காணாமல் போயிருந்தது. மேலும் ஒரு சிலர் விரல்களில் உள்ளிருக்கும் எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருந்தது.
இதனால் அந்த குழந்தையை உடனடியாக நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையினர் காயங்களுக்கு காரணம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் குழந்தையை ஒன்றிற்கும் மேற்பட்ட எலிகள் கடித்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த வீடு முழுவதும் குப்பை நிறைந்து எலிகள் நடமாடும் அளவிற்கு இருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் குழந்தை வளர்ப்பதில் பொறுப்பாற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு நலமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
6 month baby body 50 places blood wounds