ஈரானில் குடியிருப்பு கட்டிடத்தில் வெடிவிபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஈரானில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரானின் வடமேற்கு பகுதி மற்றும் குர்திஷ் மக்கள் அதிக அளவு வசிக்கும் நகரமான புக்கனில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட ஆறு பேரின் உடல்களை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக நகரத்தின் தீயணைப்புத் தலைவர் ரசூல் மரூபி தெரிவித்துள்ளார்.

மேலும் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 died as blast in residential building in Iran


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->