இளம்பெண்ணின் பையில் புதிய மாடல் ஐபோன்கள் - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு.!
26 new modal iphones seized in delhi airport
விமான நிலையங்களில் வெளிநாட்டிற்குச் செல்பவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்கம், போதைப்பொருள், செல்போன் மற்றும் உயிரினங்களைக் கடத்துவதும், அவர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், இன்று டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவர் செல்போன்களைக் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, அந்த பெண்ணின் பையில் 26 புதிய மாடல் ஐபோன்கள் டிஷ்யூ பேப்பரில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஐபோன்களை கடத்தி கொண்டு வந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு சுமார் 37 லட்சம் ரூபாய் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
26 new modal iphones seized in delhi airport