அமெரிக்காவை உறைய வைத்த பனிப்புயல்.! வாகன விபத்தில் 16 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக மக்கள் தயாராகி வந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட தீவிர பனிப்புயலால் பல பகுதிகள் உறைந்து போயுள்ளது. இதில் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான பஃபலோ, டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரிக்கும் கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் கடுமையான பனி புயலால் 2700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6400 விமானங்கள் கால தாமதத்துடன் புறப்பட்டு சென்றன. மேலும் பனிப்பொழிவால் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு இதுவரை 7 லட்சம் மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் சாலைகளில் பனி அடர்ந்து காணப்படுவதால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஓஹியோவின் டொலிடோ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன.

இதுவரை பனியினால் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வாஷிங்டன் டி.சி.யில் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவால் நேற்றும், இன்றும் வாகன போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 people kills accident in snow storm hit america


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->