மெக்சிகோ சிறைச்சாலையில் மர்மநபர்கள் தாக்குதல் - 14 பேர் பலி - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் சிறையில் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 சிறை காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவின் டெக்சாஸின் எல் பாஸோவில் இருந்து எல்லைக்கு அப்பால் உள்ள சியுடட்ஜூவாரேஸ் பகுதியில் உள்ள சிறையில் திடீரென நேற்று காலை 7 மணியளவில் பல்வேறு கவச வாகனங்களில் சிறைச்சாலைக்கு ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 10 சிறை காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் சிறையில் இருந்து 24 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து பவுல்வார்டு வழியாக தப்பித்துச் சென்ற துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களின் ஒரு வாகனத்தை துரத்திப் பிடித்ததில் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 killed after armed men attack Mexican border prison


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->