கம்போடியாவில் ஹோட்டல் சூதாட்ட விடுதியில் பயங்கர தீ விபத்து - 10 பேர் பலி, 30 பேர் காயம்
10 dead 30 injured in huge hotel fire on Cambodia
கம்போடியாவில் நட்சத்திர ஹோட்டல் சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய கம்போடியாவின் நகரமான பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டயமண்ட் சிட்டி ஹோட்டலுக்குள் உள்ள சூதாட்ட விடுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 11:30 மணியளவில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து மளமளவென ஹோட்டல் முழுவதும் பரவ தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் தாய்லாந்து தரப்பில் இருந்து தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சக வட்டாரம் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் தாய்லாந்தின் சா கேயோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
10 dead 30 injured in huge hotel fire on Cambodia