தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை!
Tamilnadu Weather report may 16
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 15) மாலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை இடியுடன் சேர்ந்து பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வாய்ப்புகள் இருப்பதால் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லாமல் இருக்குமாறு, மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து விலகி பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை (மே 17) தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamilnadu Weather report may 16