மொத்தமாக முடங்கிறதா? நிதிநெருக்கடியில் சிக்கிய வோடஃபோன் - ஐடியா!
VI Loss SC Case
வோடஃபோன் - ஐடியா (VI) நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், தங்களது மொத்த வருவாய் அடிப்படையிலான செலுத்த வேண்டிய பாக்கிகளை விலக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 13ஆம் தேதி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், "2025-26 நிதியாண்டுக்கு பிறகு நாங்கள் சேவைகளை வழங்க முடியாத அளவுக்கு நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளோம். ஏற்கனவே மார்ச் 2026க்குள் ரூ.18,000 கோடி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் புதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால், வங்கிகள் கூட கடன் வழங்க மறுக்கின்றன" என தெரிவித்துள்ளது.
இதனால், தவணை கட்டண திட்டங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், அரசு ஏற்கனவே பங்குதாரராக இருந்தாலும், நிதிச்சுமை இன்னும் குறையவில்லை எனவும் விளக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு 33.1% பங்குகளுடன் பெரிய பங்குதாரராக இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகைகள், ஒத்திவைக்கப்பட்டக் கட்டணங்கள் உள்ளிட்டவை பங்குகளாக மாற்றப்பட்ட போதும், நிறுவனம் நிதிச்சுமையில் இருந்து விடுபடவில்லை.
இந்த சூழ்நிலை தொடர்ந்தால், இந்திய தொலைத்தொடர்பு சேவையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், கோடிக்கணக்கான பயனர்கள் சேவையிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.