#BREAKING || வங்கக்கடல் பகுதியில் உருவானது "மோக்கா புயல்"..! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. இது இன்று இரவு தீவிரப் புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுபெறும்.

இதையடுத்து வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி புயல் நகர்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Storm Mocha formed in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->