இன்று இரவு 7 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருங்க...! 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை...! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!
Stay indoors until 7 pm tonight Light rain expected 11 districts Meteorological Department warns
சுமார் 0.9 கிலோமீட்டர் உயர் மட்டத்தில், வடக்கு தெலுங்கானா பகுதியிலிருந்து குமரிக்கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக நீளும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை (ட்ரஃப்) நிலவி வருகிறது. இந்த வானிலை அமைப்பு, தென் இந்தியாவின் பல பகுதிகளில் மழை செயல்பாட்டை தூண்டும் காரணியாக உருவெடுத்துள்ளது.

இதன் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7 மணி வரை, புதுக்கோட்டை,தூத்துக்குடி, ராமநாதபுரம்,திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், தென்காசி,கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வானிலை மாற்றம், வெப்பம் தணியும் சூழலை உருவாக்கினாலும், இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Stay indoors until 7 pm tonight Light rain expected 11 districts Meteorological Department warns