"திசை மாறும் காற்றின் வேகம்".. 3 மாவட்டங்களில் லேசான மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
South districts are likely to receive moderate rain in 3 hours
தென் தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகம் ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
South districts are likely to receive moderate rain in 3 hours