கடும் வெள்ளப்பெருக்கு... காங்கோவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


காங்கோவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில்   கிழக்கு மாகாணமான கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பி அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது  ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன்  கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து  மீட்பு படையினருக்கு உதவியாக உள்ளூர் மக்களும் இணைந்து  படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

இருப்பினும்  இதுவரை நடைபெற்ற மீட்பு பணியில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மயமானவர்களை  தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 

இந்த நிலையில் 104  பேர் இறந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனவும் இதில்28 பேர்   காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கோவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Severe flood More than 100 people have lost their lives in Congo


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->