EPS பிறந்தநாள் விழா.. ஆண்டிபட்டியில் தொண்டர்கள் உற்சாகம்!
EPS birthday celebration Enthusiasm of volunteers in Andipatti
ஆண்டிபட்டி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாள் விழா அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தொண்டர்களால் கொண்டாடப்படுவருகிறது.அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா, அதிமுக தேனி கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆண்டிபட்டி பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் முறுக்கோடை ராமர், மாநில ஜெ பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், அவைத்தலைவர் மதியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரில் ஜம்பலிபுத்தூர் கதலி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
EPS birthday celebration Enthusiasm of volunteers in Andipatti