சுட்டெரிக்கும் வெயில்...தள்ளிப்போகிறதா பள்ளி திறப்பு...? - வானிலை மையத்தின் அதிர்ச்சி அறிக்கையால் கல்வித்துறை தீவிர ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாநிலம் முழுவதும் கடும் வெப்ப அலை நீடித்து வருவதால், பள்ளிகள் திறப்பு தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை சூழல் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விரிவான தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாக கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வானிலை ஆய்வு மையமும் தமிழக அரசுக்கு முக்கிய தகவலை வழங்கியுள்ளது. அதன்படி, “தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் 4-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும். அதன் பின்னரே வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நேரடியாக தமிழக அரசிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் அடிப்படையில், மாணவர்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளிவைக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.அதன்படி, ஜூன் 8-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scorching heat Will school opening be postponed Education Department issues serious advisory due shocking report from Meteorological Center


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->