அடுத்த 3 மணி நேரத்திற்கு.."இடி மின்னலுடன் மழை பெய்யும்".. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!
Rain with thunder and lightning in 5 districts of tamilnadu
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையை நிலவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெயர் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain with thunder and lightning in 5 districts of tamilnadu